கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?


​Short Film லட்சுமி யார் தெரியுமா ? 

Short Film லட்சுமி யார் தெரியுமா ? சொன்னா நம்ப மாட்டீங்க பாருங்க !


இவரது முழுப்பெயர் லட்சுமி பிரியா சந்திர மௌலி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்பையும் சென்னையில் தான் முடிந்தார் லட்சுமி பிரியா. அதன் பின்னர், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒக்ர்க்கில் எம்.பி.ஏ படித்தார். நல்ல திறமைசாலியான இவர் பின்னர் ஒரு ஐ.டி கம்பெனியில் ஹெச்.ஆராக வேலை செய்துள்ளார்.

ஆனால் நடிப்பு மற்றும் ஸ்போர்ட்சில் அதீத ஆர்வம் கொண்டவர் லட்சுமி பிரியா. இதனால் நடிப்பிற்காக சென்னையின் உள்ள ஒரு நாடக கம்பெனியில் (ஏவாம்) சேர்ந்தார். மேலும் , ஸ்போர்ட்சிற்காக கிரிக்கெட் விளையாடத் துவங்கினார்.


இவரது ஸ்டேஜ் பேர்பாமன்ஸ் பார்த்து இயக்குனர் மகிழ் திருமேனி, இவருக்கு முன்தினம் பார்த்தேனே என்கிற படத்தில் நடிக்க வைத்தார். அதிலும் கலக்கிய அவருக்கு இடையில் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சென்று கலந்து கொண்டு மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடினார்.

பின்னர், சிறிது காலம் தள்ளி மீண்டும் நடிக்க வந்துவிட்டார் லட்சுமி. அதன் பின்னர் தர்மயுத்தம் என்ற விஜய் டிவியின் சீரியலில் நடித்தார். அடுத்தடுத்து சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார் லட்சுமி பிரியா.

இந்திய கிரிக்கெட்டின் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுத்தால், நானே அவர்களிடம் கேட்டு நடித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார் இந்த திறமைசாலி. ஏனெனில் அவருடன் நண்பராக ஆடிய லட்சுமிக்கு மிதாலியைப் பற்றி நன்கு தெரியும்லவா.

தற்போது வரை, யாகவாரயினும் நா காக்க, சுட்ட கதை, மாயா, ரிச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஆசையெல்லாம் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதுதானாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *