இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

பிக் பாஸ் 2: முதல் கேப்டனாக ஜனனி ஐயர் தேர்வு!

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில்,
வீட்டின் முதல் கேப்டனாக நடிகை ஜனனி ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி, ஒவ்வொரு வாரமும் ஒரு
கேப்டன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது அறிவுரைப்படி போட்டியாளர்கள் நடந்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில், இந்த சீசனின் முதல் கேப்டனை தேர்வு செய்ய, பிக் பாஸ் வீட்டில் 3 கவர்கள்
மறைத்து வைக்கப்பட்டது. அதை கண்டுபிடிப்பவர்கள் கேப்டனாக போட்டியிட முடியும் என்று
கூறப்பட்டது.

இதில் மகத் ஒரு கவரையும், ஜனனி ஐயர் ஒரு கவரையும் கண்டுபிடித்தனர்.
மூன்றாவது கவரை தேடும்போது சென்ராயனுக்கும், மும்தாஜுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர்
அந்த 3வது கவரை மும்தாஜ் கண்டுபிடித்து கேப்டன் வேட்பாளராக மாறினார்.

இதைத் தொடர்ந்து 3 பேரும் தங்களை கேப்டனாக தேர்ந்தெடுக்கும்படி
பிரச்சாரம் செய்தனர். மகத் மற்றும் ஜனனிக்கு கேப்டனாக இருக்கும் அளவுக்கு மெச்சூரிட்டி
இல்லை, அதனால் தன்னை தேர்வு செய்யும்படி மும்தாஜ் பிராச்சாரம் செய்தார். ஆனால், வாக்குகளின்
அடிப்படையில் ஜனனி ஐயர் பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பத்திலிருந்தே மும்தாஜ் நாட்டாமை போக்குடன் நடந்துக்
கொள்வதாக பிக் பாஸிடம் போட்டியாளர்கள் புகார் தெரிவித்த நிலையில், ஜனனியின் முடிவுகளுக்கு
மும்தாஜ் ஒத்துழைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிக் பாஸ் 2 வீட்டில் முதல் சன்டை மும்தாஜ் ஜனனி ஐயர் | Bigg Boss Tamil | Bigg Boss 2 Tamil | Mumtaj


https://www.youtube.com/watch?v=p88b3Whn1AY

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?