கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?


அன்புச்செழியனை அனைவரும் சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது

‘சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை அனைவரும் சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது’ என நடிகரும் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

சினிமா இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கடந்த 21-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வட்டி மேல் வட்டி கேட்டு நெருக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வு திரைத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


அன்புச்செழியனுக்கு சினிமா துறையின் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை இயக்குநர் சீனு ராமசாமி அன்புசெழியனுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது  நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனியும் அன்புசெழியனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *