சிலையின் முகத்தில் ஜெயலலிதாவின் சாயல் சிறிதும் இல்லை : டிடிவி தினகரன்

கடந்த 24-ஆம் தேதி, மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, அதிமுக கட்சி அலுவலகத்தில், உள்ள எம்.ஜி.ஆரின் சிலையின் அருகே, ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அதனை ஓபிஎஸ்-ம், இபிஎஸ்-ம் தான் திறந்து வைத்தனர்.

ஆனால், அந்த சிலையைப் பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். ஏனென்றால், அந்த சிலையின் முகத்தில், ஜெயலலிதாவின் சாயல் சிறிதும் இல்லை. இதைத் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த மக்களே, இதைப் பார்த்து நொந்து போய் விட்டார்கள்.

இது யாருடைய சிலை என்று, ஒரு பட்டி மன்றமே வைக்கும் அளவிற்கு, ஏகப்பட்ட குழப்பங்களுடன், அவசரகதியில் உருவாக்கப் பட்ட இந்தச் சிலையின் அகலமும் அதிகமாக இருக்கிறது, என்ற குற்றச்சாட்டும் மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

இந்த சிலையின் முகத்தை ஒரு பக்கம் பார்த்தால், நடிகை காந்திமதி போலவும், இன்னொரு பக்கம் பார்த்தால் கே.பி.சுந்தராம்பாள் போலவும், மற்றொரு புறம் வளர்மதி போலவும் இருக்கிறதென்று, கடந்த இரண்டு நாட்களாக, வாட்ஸ் அப்பிலும், நெட்டிலும் மக்கள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதை விடக் கொடுமையானது என்னவென்றால், இந்த சிலையின் முகத்தையும், முதல்வர் எடப்பரடி பழனிச்சாமி மனைவியின் புகைப்படத்தையும், சேர்த்துப் போட்டு, அம்மாவிற்கு சிலை வைக்கச் சொன்னால், மனைவிக்கு சிலை வைத்திருக்கிறாரே என்று கிண்டல் அடிக்காத மக்களே இல்லை.

இந்த செய்தி தான் இப்போது மக்களிடையே வைரலாகப் பரவி வருகிறது. இதைப் பற்றியான கமெண்ட்ஸ் தான், இப்போதைய தமிழகத்தின் காமெடி ஹை லைட்டான விஷயமாக இருக்கிறது.

எரியும் தீயில், எண்ணெய் ஊற்றுவது போல, “ஏய்யா. புரட்சித் தலைவி அம்மாவிற்கு சிலை வைக்கனும்னு நெனச்சுக்கிட்டு, யாருடைய அம்மாவிற்கோ சிலை வச்சிருக்கீங்களே” ஒரு சிலையைக் கூட உருப்படியாச் செய்ய முடியாத நீங்க, என்னத்த ஆட்சி பண்ணிக் கிழிக்கப் போறீங்க… என்று டிடிவி தினகரன், சகட்டு மேனிக்குப் பேசினாராம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*