நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத அதிமுக, அரசியல் நாகரிகம் தெரியா துரோகிகள்: திவாகரன்

தஞ்சை: அதிமுக குறித்து திவாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நடராஜன் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்ரமணியன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

நாஞ்சில் சம்பத் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். இதையடுத்து நடராஜன் உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், நடராஜன் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அரசியல் நாகரிகம் தெரிந்த அனைவரும் அஞ்சலி செலுத்தினர். ஆனால் பதவி சுகம் பெற்றவர்கள், அரசியல் நாகரிகம் தெரியாத அதிமுகவினர் உள்ளனர்.

அவர்களுக்கு நன்றி துளியும் இல்லை. அரசியல் வேறு, துக்கம் வேறு என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.

எவ்வளவு துரோகம் செய்தாலும் மீண்டும் நீந்தி வருவோம் என்று திவாகரன் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*