கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : தயிராக மாற்றமுடியாத ஒரே பால் எது?


இதற்காகதான் நான் படித்த படிப்பையே விட்டேன் .,மனம் திறந்த மலர் டீச்சர் ..!

நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனதில் நின்றவர். ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்தார். ஒரு டாக்டராக ஆகவேண்டும் என்பதே அவரின் கனவாம்.இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றி கூறியிருப்பதாவது, தாம்தூம் படத்தில் கங்கனா ரனாவத் தோழியாகவும், கஸ்தூரிமான் படத்தில் மீரா ஜாஸ்மின் தோழியாகவும் நடித்துள்ளேன்.சினிமா நிரந்தர தொழில் இல்லை. அதிலும் ஹீரோயின்களின் காலம் 6 ஆண்டுகள் தான், படிப்பு தான் என்றும் கை கொடுக்கும் என்று அப்பா என்னை மருத்துவம் படிக்க ஜார்ஜியா அனுப்பி வைத்தார்.

                               ஜார்ஜியாவில் படித்துக் கொண்டிருந்தபோது பிரேமம் பட வாய்ப்பு கிடைத்தது. படிப்பு பாதிக்காமல் விடுமுறையில் மட்டும் நடிக்குமாறு என் பெற்றோர் தெரிவித்தனர். பின் விடுமுறை நாட்களில் வந்து தான் பிரேமம் படத்தில் நடித்தேன். இப்படம் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்றதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்துள்ளது.பின் சினிமாவில் முழு கவனம் செலுத்துவதால் டாக்டர் வேலையை செய்வது இல்லை. மருத்துவம் உயிர் சம்பந்தப்பட்டது. அதனால் சினிமாவில் நடித்துக் கொண்டே மருத்துவம் பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை.       
                     முழுநேர நடிகையாகிவிட்டதால் நான் டாக்டர் பட்டத்தை கூட பயன்படுத்தவில்லை. கடவுள் அருளால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *