கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?


திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை,திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலினின் வீட்டிற்கு நள்ளிரவு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து நள்ளிரவில் கோபாலபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். 

சோதனையில் வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *