கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?


ஐபிஎல் : காவேரி உரிமை மீட்புக்கு கிடைத்த வெற்றி – அரசியல் தலைவர்கள் கருத்து

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கையை பரிசீலிக்காமல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் வெடித்தது.விடுதலை சிறுத்தைக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, மே 17 இயக்கம், SDPI கட்சி, தமிழ் ஆர்வலர்கள், மற்றும் தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை உட்பட பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த குரலாய் அண்ணாசாலையில் ஒலித்தனர்.

பலத்த பாதுகாப்புடனே ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் தனியார் விடுதியில் இருந்து மைதானத்திற்கு வரவழைத்து போட்டி நடத்தப்பட்டது.  இருப்பினும் போட்டி நடைபெறும் போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் செருப்புகளை மைதானத்திற்குள் வீசி முழக்கங்களை முழங்கினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டனர். சில நேர பதட்டத்திற்கு பிறகு போட்டி நடைபெற்றது.அடுத்து நடத்தவிருக்கிற போட்டிகளுக்கும் எங்கள் போராட்டம் தொடரும் என அரசியல் தலைவர்கள் அறிவித்திருந்த வேளையில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து இடமாற்றம் செய்வதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் மாற்றப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு காவேரி உரிமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

 

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *