டி வில்லியர்ஸ் விளாசலில் பஞ்சரானது பஞ்சாப்!

டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆரோன் பின்ச் ரன் எதுவும் எடுக்காமலும் யுவராஜ் சிங் வெறும் 4 ரன்களிலும் வெளியேறினார். இதனால் அந்த அணி தடுமாறியது. பின்னர் கருண் நாயரும் (29 ரன்) கேப்டன் அஸ்வினும் (33 ரன், 21 பந்து) அணியை காப்பாற்ற போராடினர். அந்த அணி 19. 2 ஓவரில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

(போட்டியை ரசிக்கும் பஞ்சாப் அணியின் பிரீத்தி ஜிந்தா, விராத் மனைவி அனுஷ்கா ஷர்மா)

பெங்களூரு தரப்பில் உமேஷ் யாதவ் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

பின்னர் ஆடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது பஞ்சாப். முதல் ஓவரை அக்‌ஷர் படேல், இரண்டாவது பந்தில் பிரண்டன் மேக்குலமை தூக்கினார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் கோலியின் (21 ரன்) விக்கெட்டை, இளம் சுழல் முஜீப் (ஆப்கானிஸ்தான்) வீழ்த்தினார். முஜிப்புக்கு முதல் ஐபிஎல் விக்கெட் இது. 

(கோலியின் விக்கெட்டை வீழ்த்திய முஜிப்)

இதையடுத்து வந்த டிவில்லியர்ஸும் தொடர்க்க ஆட்டக்காரர் டிகாக்கும் அடித்து ஆடினர். இதையடுத்து அந்த அணி, 19.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. டிவில்லியர்ஸ் 57 ரன்களும் குயின்டன் டி காக் 45 ரன்களும் எடுத்தனர். உமேஷ் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

இதையடுத்து 11-வது ஐ.பி.எல். தொடரில் தனது முதல் வெற்றியை பெங்களூரு அணி நேற்றுப் பதிவு செய்தது. அடுத்து பஞ்சாப் அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*