கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது – மகுடம் சூட்டப்போவது யார்?

பெங்களூர்:
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் 38 மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி 38 மையங்களிலும் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் சிலமணி நேரங்களில் முன்னிலை நிலவரமும், 12 மணியளவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பதும் தெரியவரும். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் கர்நாடக தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. #KarnatakaElections2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*