கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?


பிரதமர் மோடி இன்று நேபாளம் புறப்பட்டு சென்றார் – நீர் மின்நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக இன்று நேபாளம் புறப்பட்டுச் சென்றார். நேபாள நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவில் இருந்து புறப்பட்டு, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கே நேரடியாக  பிரதமர் மோடி செல்கிறார். அங்கிருந்து முக்திநாத் புறப்படும் மோடி, அதற்கு முன்பாக சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்.

முக்திநாத்தில் இருந்து காத்மாண்டு செல்லும் பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி, துணை ஜனாதிபதி நந்த பகதூர் புன், பிரதமர் ஒலி உள்ளிட்ட தலைவர்களுடன் பேச உள்ளார்.  மூன்று ஆண்டுகளில், பிரதமர் மோடி நேபாளம் பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். இந்த சுற்றுப்பயணத்தின்போது ஜனக்பூரில் இருந்து அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார். ஷர்மா ஒலியுடன் இணைந்து 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மோடியை வரவேற்கும் வகையில் காத்மாண்டு நகரில் வரவேற்பு வளைவுகள், இரு நாடுகளின் தேசியக்கொடிகள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மோடியை பார்ப்பதற்காக ஜனக்பூரின் பார்பிகா மைதானத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர்.  #Modi #ModiNepalVisit

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *