கடலூரில் வலுக்கும் அதிமுக உட்கட்சி பூசல் – மாவட்ட செயலாளரை மாற்ற கோரி கோஷம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்றக்  கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த  கே.பி.முனுசாமியிடம்  மாவட்டச் செயலாளரை மாற்றக் கோரி கோஷங்கள்.கடலூர் மஞ்சை நகர் மைதானதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அவைத் தலைவருமான கோ.ஐயப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் சர்வாதிகாரி போல் செயல்படுவதால் அவருக்கு மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது என்றும் இதனால் தான் MLA , மற்றும் MPக்களின் அனைத்து விழாக்களையும் புறக்கணித்து வருகின்றனர்.மேலும் அதிமுக மீது அமைச்சர் எம்.சி.சம்பத்தால் மாவட்டத்தில் அதிமுக வின் செல்வாக்கு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் ஒன்று திரண்டு  தொழில்துறை அமைச்சருக்கு  எதிராக கோஷங்களையும் , அவரை   மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றக் கோரி கோஷங்கள் எழுப்பி வரவேற்பு அளித்து பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் களைந்து சென்றனர் .இதனால் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் இல்லாமல் தலைவர்கள் பேசும் அவல நிலை ஏற்பட்டது.  

.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*