நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு

சென்னை: ஜெயலலிதா குறித்து எந்த தவறான கருத்தையும் நான் கூறவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.

இதில் கலந்த்கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் 18 எம். எல். ஏ. க்களும் பெற்றுக் கொண்டு தற்போது மக்களை ஏமாற்றுகின்றனர் என பேசினார். அவரது இந்த பேச்சு அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி அவர் அவ்வாறு பேசியதை கட்சியின் மேலிடம் விரும்பவில்லை எனவும் எந்த நேரம் வேண்டுமானாலும் அவரது பதவிக்கு ஆபத்து வரலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தான் ஜெயலலிதா குறித்து தவறான அர்த்தத்தில் பேசவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவிற்கு தெரியாமல் கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு தினகரன் அரசியல் செய்து வருகிறார் என கருத்தப்பட பேசினேனே தவிர ஜெயலலிதா குறித்த எந்த தவறான கருத்தையும் நான் கூறவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*