சேவாக் கூச்ச சுபாவம் கொண்டவர்: சச்சின் தகவல்!

இந்த தொடரில் இருவரும் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் சேவாக் குறித்து சச்சின் பேசியது ஆச்சரியமாக இருந்தது. நம் அனைவருக்கும் சேவாக்கை ஒரு அதிரடி ஆட்டக்காரராக தெரியும். ஆனால் சேவாக் முதன் முதலில் இந்திய அணியில் இடம்பிடித்த காலத்தில் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்ததாக சச்சின் கூறினார். 

சச்சின் பேசுகையில்,  ’வீரு இந்திய அணியில் இணைந்த காலகட்டத்தில் என்னுடன் பேசமாட்டார். இது சரிபட்டு வராது என எனக்கு தோன்றியது. ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடவுள்ளோம். நாங்கள் இருவரும் நன்றாக பேசி பழகினால் தான் களத்தில் சிறப்பாக செயல்பட வசதியாக இருக்கும். எனவே நான் அவரிடம் சாப்பிட போலாமா என அழைத்தேன். கிளம்புவதற்கு முன் உங்களுக்கு என்ன பிடிக்கும் என கேட்டேன். அதற்கு அவர் நான் சைவம் என்று பதிலளித்தார். ஏன் சைவம் சாப்பிடுறீங்க கேட்டேன். அதுக்கு வீரு, சிக்கன் சாப்பிட்டால் வெயிட் போட்டும்னு வீட்ல சொன்னாங்க என்றார். என்னை பாரு நான் என்ன உன்ன விட குண்டாவா இருக்கேன்? நான் வருடம் முழுவதும் சிக்கன் சாப்டுறேன். வா ட்ரை பண்ணி பாரு என்றேன். இப்ப வீரு சிக்கனை வெளுத்து வாங்குறார்’ என சச்சின் கூறினார்.

சேவாக் பேசுகையில் ’நான் இந்திய அணியில் இடம்பிடித்த சமயத்தில் கூச்ச சுபாவம் கொண்டவனாக இருந்தேன்.  நான் முதன்முறையாக சச்சினை சந்தித்த போது அவர் கைக்குலுக்கி விட்டு சென்று விட்டார். நான் கிரிக்கெட்டுக்கு வந்ததற்கு காரணமே சச்சின் தான். அவரிடமே நாம் கைகுலுக்கி விட்டோம் என நினைத்துக்கொண்டேன். இந்திய அணியில் நான் சீனியர் வீரராக மாறியபோது சச்சின் என்னிடம் நடந்துக்கொண்டது போல் நடந்துக்கொண்டேன். ஒருவரை பற்றி தெரியாமல் அவர்களிடம் நெருக்கமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன்’ என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*