போலீஸ் ட்ரெஸ் போட வெட்கப்படுகிறேன்…. சின்னத்திரை நடிகை நிலானி கைது

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறை உடை அணிந்து காவல்துறைக்கு எதிராக  கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். அந்த வகையில், பிரபல சின்னத்திரை நடிகை நிலானி காவல்துறை உடை அணிந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்துக்கள் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது திட்டமிட்ட படுகொலை எனவும் நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் இல்லையென்றால் இலங்கையில் நடைபெற்றது போல் நாளை தமிழகத்திலும் நடைபெறும் எனவும் பேசியிருந்தார். அவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ரிஷி என்பவர் காவல்துறையிடம் அளித்த புகாரின்படி சின்னத்திரை நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், காவல்துறை உடை அணிந்து, போலீஸ் உடை அணியவே வெட்கப்படுகிறேன் என தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி இன்று கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலானியை காவல்துறையினர் சென்னை அழைத்து வர இருக்கின்றனர்

போலிஸ் வேடமிட்டு வீடியோ வெளியிட்ட நடிகை கைது! | Serial Actress Nilani arrested for Tuticorin Issue

https://www.youtube.com/watch?v=gd6NT9kRtO0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*