பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி ஆறுதல்!

சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த கார் ஓட்டுநர் பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி அனுராதா மற்றும் மகள் ஆறுதல் கூறினர்.சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார் டிடிவி தினகரன்.இந்நிலையில், அடையாறில் இருக்கும் டிடிவி தினகரனின் வீட்டில் மர்ம நபர்கள் இன்று பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் தினகரனின் ஓட்டுநர் பாண்டித்துரை, புகைப்பட கலைஞர் டார்வின், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் முன்பாக ஓட்டுநர் பாண்டித்துறைக்கு தினகரன் மனைவி அனுராதா மற்றும் அவரது மகள் ஜெயஹர்ஷினி ஆகியோர் ஆறுதல் கூறினர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் தினகரன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்து பலத்த சேதமடைந்தது.

கடந்த வாரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் நகர செயலாளர் பதவியில் இருந்து புல்லட் பரிமளம் என்பவரை நீக்கிவிட்டு உமா மகேஸ்வரி என்பவரை அந்த பதவியில் தினகரன் நியமித்துள்ளார். இதனையடுத்து தினகரனை சந்தித்து நன்றி தெரிவிக்க இன்று உமா மகேஸ்வரி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக உமா மகேஸ்வரி மீது பரிமளம் தரப்பினர் தாக்குதல் நடத்த பெட்ரோல் குண்டுகளுடன் காரில் வந்துள்ளனர்.

இதில் எதிர்பாராத விதமாக புல்லட் பரிமளத்தின் காரில் இருந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து பரிமளத்தின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் புல்லட் பரிமளத்தை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தினகரன் வீட்டில் அடையாறு துணை ஆணையர் ஷசாங்சாய் நேரில் ஆய்வு செய்தார்.

டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி | TTV Dhinakaran | Petrol Bomb

https://www.youtube.com/watch?v=mjI5eyPHst0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*