கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன?


#GobackModi-யை தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GobackAmitShah

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வர உள்ளார். இந்நிலையில், #GobackAmitShah என்கின்ற வாசகம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். அவர் சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று சென்னை வருகிறார்.

ஒன்னரை ஆண்டுக்கு பின்னர் அமித்ஷா தமிழகம் வருவதால் அவரை வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் #GobackAmitShah என்று ட்ரெண்டாகி வருகிறது. இதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத போது மோடி சென்னை வந்த போது #GobackModi என இந்திய அளவில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.

Tags:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *