வருமான வரித்துறை ரெய்டுக்கும் நிர்மலா தேவிக்கும் தொடர்பு இருக்கா?

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி இருக்கிறார் அல்லவா… அவரது கணவர் சரவண பாண்டி என்பவர் ஒப்பந்ததாரர். சரவண பாண்டியும்,செய்யாதுரையின் கடைசி மகன் பாலசுப்ரமணியனும் நண்பர்களாம். நிர்மலா தேவியும் சரவண பாண்டியும் பல வருடங்களாகவே பிரிந்துதான் இருக்கிறார்கள். நிர்மலா தேவிக்கும் கவர்னர் அலுவலகத்துக்கும் இருக்கும் தொடர்புகளை சரவண பாண்டிதான் பாலசுப்ரமணியனிடம் சொல்லியிருக்கிறார். பாலசுப்ரமணியன் மூலமாக செய்யாதுரைக்கு விஷயம் போக, அவர்தான் ஆட்சி மேலிடத்திடம் எல்லாவற்றையும் கொட்டியிருக்கிறார். அதன் பிறகுதான் நிர்மலா தேவி ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதாவது தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் கவர்னருக்கு செக் வைக்க நிர்மலா தேவியை பலிகடா ஆக்குவது என முடிவெடுத்துதான் ஆடியோவை வெளியிட்டார்கள். இந்த விஷயம் எல்லாம் இப்போது மத்திய அரசுக்கு போயிருக்கிறது. அந்தக் கோபத்தில்தான் செய்யாதுரை நிறுவனத்தின் மீது ரெய்டு நடவடிக்கை பாய்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ, தமிழக அரசு மீது இருக்கும் கோபத்தில்தான் இந்த ரெய்டு நடவடிக்கை என்பது தெளிவாக தெரிகிறது”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*