திணறடிக்கும் வேகத்தில் தினகரன்! தேர்தலுக்கு முதல் வேட்பாளரை அறிவித்ததால் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்! 

திண்டுக்கல்  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி  சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் விரோத, ஊழல் ஆட்சி தான்  நடைபெற்று வருகிறது.
இதனை மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இந்தியாவிலேயே ஊழலில் முதலிடம் பெற்ற மாநிலம் தமிழகம் தான் மேலும் இதனை சாதாரண மக்களை கேட்டால் கூட அவர்களும் இதனை தான் கூறுவார்கள் என்றார்கள். மேலும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா  கொண்டு வருவதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்றும் அடுத்த வருடன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறும்  

அப்போது மக்கள் விரும்பிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் மலரும் என்றும் தினகரன் கூறியுள்ளார். மேலும் யாரால் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். கைகோர்த்தார்களோ? அவர்களாலேயே அது பிரியும் என்றும் தினகரன் கூறியுள்ளார். பின்னர் அவர் திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டு செல்லும் போது ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது அங்கு பேசிய தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மனோகரன் போட்டியிடுவார். அரசு தலைமை கொறடாவாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணியாற்றிய அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து அவர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அடுத்து நடைபெற போவது உள்ளாட்சி தேர்தலா நாடாளுமன்ற தேர்தலா என்ற நிலை இருக்க சட்டமன்ற தேர்தலுக்கு 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் களத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*