தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு இன்று விசாரணை

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அமர்வு மாற்றுபட்ட தீர்ப்பை வழங்கியது.

18 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், 18 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு வழங்கினர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால், தகுதி நீக்க வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தால் மேலும் தாமதம் ஏற்படும். எனவே, வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், மூன்றாவது நீதிபதியை மாற்ற வேண்டும் எனவும் கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், 3-வது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டதுடன், வழக்கை விரைந்து முடிக்கவும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, இந்த மனுவை கடந்த 4-ம் தேதி நீதிபதி சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 23-ம் தேதி (இன்று) முதல் 27-ம் தேதி வரை தினமும் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தார்.

அதன்படி, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கானாது மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

TTV Dhinakaran support 18 mlas disqualification case: 3rd judge to hear today

மத்தியில் அடுத்த ஆட்சி அ.ம.மு.க எம்.பி.க்களின் ஆதரவோடுதான் அமையும்

https://www.youtube.com/watch?v=CwUuu_8UqO0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*