தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டும் தினகரன்.. அச்சத்தில் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உருவாக்கினார் டிடிவி தினகரன்.
பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டியை அமைத்து வரும் தினகரன் தற்போது தேர்தலுக்கான பணிக்குழு மற்றும் மண்டல பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி வருகிறார் டிடிவி தினகரன்.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு 25 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளும் கொடுக்க உள்ளதாக தீர்மானித்திருக்கும் தினகரன் தற்போது அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டதாக தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்றாற்போல அணைத்து கட்சி தலைவர்களும் தங்களை தேர்தலை எதிர்நோக்கி தயார்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தினகரனும் அதற்கான வேலைகளை இறுதிசெய்து கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திமுக மற்றும் அதிமுக விற்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க பலமான கட்சிகளை குறிவைக்கும் தினகரன் குறைந்தது 20 முதல் 25 இடங்களையாவது பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் டிடிவி தினகரன்.
அதேபோல தனக்கு சாதகமான தொகுதிகளையும் கண்டறிய தமிழகமெங்கும் நிர்வாகிகளை தயார்செய்து வரும் தினகரன் கிட்டத்தட்ட அதனை முடித்து விட்டார் என்றுபேசப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையோடு பூத் கமிட்டி அமைக்கும் பணியையும் விரிவுபடுத்த ஆணையிட்டுள்ளார் டிடிவி.
தற்போது தமிழகத்தை 6 மண்டலமாக பிரித்து பொறுப்பாளர்களையும் அறிவித்து அதிரடி காட்டினார் டிடிவி.

ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய டிடிவி தினகரன் | TTV Dhinakaran R.K Nagar News

https://youtu.be/NSzxA5A2CBY

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*