ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களுக்கும் காத்திருக்கும் ஒரு ஸ்பெஷல்!

தமிழ் சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருப்பவர் விஜய். அவரின் ரசிகர்கள் கூட்டம் ஏற்கனவே பரவிக்கிடக்கும் வேளையில் இன்னமும் கூடிக்கொண்டே தான் செல்கிறது. அவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சர்க்கார் இப்போதே பரபரப்பை கிளப்பி வருகிறது. ஏற்கனவே இணையதளத்தில் அதிகமான சாதனை செய்துவிட்டது.

அதே வேளையில் அவரின் படங்களுக்கே உண்டான சர்ச்சைகள் இதற்கும் இப்போதே தொடங்கிவிட்டது. மேலும் இப்படத்தை முக்கிய தொலைக்காட்சி நிறுவனமான சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இது ஒருபக்கம் இருக்க, இப்போதெல்லாம் வார இறுதி நாட்களில் சானல்களுக்கிடையே படங்களை Telecast செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக அஜித், விஜய் படங்களை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் நாளை விஜய் நடித்த போக்கிரி படத்தை திரையிடுகிறார்கள். தொடர்ந்து TRP ல் முன்னணியில் இருக்கும் அந்த சானல் மீண்டும் இடத்தை தக்கவைக்குமா? விஜய் மீண்டும் TRP KING என நிரூபிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம். ஆக விஜய் ரசிகர்களுக்கு நாளைய தினம் கொண்டாட்டம் தான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*