திருமணம் செய்து குடும்பம் நடத்தியவர் மீது சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு

பதினாறு வயது சிறுமி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தியவர் மீது சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்தவர் லிங்கம். தொழிலாளியான இவருக்கும், சுசீந்திரம்குளத்தூர் காலனியைச் சேர்ந்த 10 ஆம்வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும், மணிக்கட்டிப் பொட்டலில் உள்ள தனது உறவினரைபார்க்க வந்தபோது லிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.இவர்களது காதல் விவகாரம் 2 பேருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலுக்குகடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லிங்கம், அந்த பெண்ணின் பெற்றோரை நேரில் பார்த்து பெண் கேட்டார்.ஆனால் அவர்கள் லிங்கத்துக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் கடந்த ஆண்டு நவம்பர்மாதம் லிங்கமும், அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறினர். உவரியில் உள்ள கோவிலுக்கு சென்று அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் அவர்கள் தனியாக குடும்பம் நடத்தினர்.இதில் அந்த பெண் கர்ப்பமானார். 9 மாதகர்ப்பிணியாக இருந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு 16 வயதே ஆவதை உறுதி செய்தனர். சிறுமி ஒருவர்கர்ப்பமானது தொடர்பாக அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் கன்னியாகுமரி அனைத்துமகளிர் காவல்துறையினர், 9 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை அழைத்துவிசாரித்தனர்.பின்னர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியதாக லிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  தலைமறைவாகிவிட்ட லிங்கத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*