திருநங்கைக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட தகராறு!. பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவம்!.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் கயல். திருநங்கையான இவர் இருதினங்களுக்கு முன் மதுரவாயல் பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் அவர்களின் வண்டியை நிறுத்திவிட்டு கயல் அருகே சென்றனர்.இதனையடுத்து இருவரும், கயலிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கயலுக்கும், அந்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாக்குவாதம் முற்றி இளைஞர்கள் கயலை தாக்கியுள்ளனர்.பின்னர் அவர்கள் வைத்திருந்த பிளேடை எடுத்து கயலின் கழுத்தை அறுத்துள்ளனர். வலியால் துடித்த கயல் அழுது சத்தம்போட்டுள்ளார். தகவலறிந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரவாயல் போலீசார் அங்கு விரைந்தார்.காயமடைந்த கயலை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிளேடால் அறுத்த 2 இளைஞரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். அவர்கள் இருவரும் வானகரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*