சேலம் இடையே 8 வழிச் சாலை அமைப்பதை எதிர்த்து,8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு

சேலம் இடையே 8 வழிச் சாலை அமைப்பதை எதிர்த்து,8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கலந்துரையாடல், கருப்புக் கொடி போராட்டம், சட்டநகல் எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகள்  சிறை சென்றனர்.திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை நடைபயணம் செல்ல முயன்றனர். அப்போது விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து 2 நாட்கள் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.பின்னர் அவர்களை பினையில் விடுவித்தனர். 8 வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் முதல் சென்னை வரை விவசாயிகள் கூட்டு இயக்கம் நடத்ததிட்டமிட்டிருந்தனர்.அதனடிப்படையில் திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையம் கோயிலில் ஒன்று திறண்ட 35 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.செங்கம் தாலுகாவில், மேல்வணக்கம்பாடி, கட்டமடுவு, மண்மலை புதுப்பாளையம், செங்கம்புதூர் மாரியம்மன் கோயில், பேருந்துநிலையம் என பல பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி பகுதியை சேர்ந்த விவசாயிசேகர் கடந்த சில வாரங்களுக்கு முன்புதங்களது விளை நிலம் மற்றும்குடியிருந்த வீடு கைகயப்படுத்தியதை அடுத்து பூச்சி மருந்து குடித்துதற்கொலை செய்து கொண்டார்.ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட சேகருக்கு விவசாயிகள் நினைவஞ்சலி செலுத்தினர். பின்னர் புதூர் மாரியம்மன் கோயிலில் கூட்டு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை அறிந்த காவல் துறையினர் இரவோடு இரவாக 2 விவசாயிகளை வீட்டிற்குள் புகுந்து கைது செய்தனர். மேலும் கட்டமடுவு பகுதியை சேர்ந்த விவசாயி அருள் என்பவரது வீட்டிற்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாது கூட்டு இயக்கத்தில் ஈடுபட முயற்சித்த அத்தனை பேரையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மாலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட விவசாயிகள் கூறியபோது, காவல்துறையினர் தங்களை எத்தனைமுறை கைது செய்தாலும் 8 வழிச் சாலை அமைக்கவிடமாட்டோம் என உறுதி கூறினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*