கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வராலாறு காணாத அளவுக்கு வெள்ளம், நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர உதவி மையம், உணவு, தங்கும் முகாம், மருத்துவ சேவை உள்ளிட்ட இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுஇதில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள  செங்கன்னூர் பகுதி அங்கு நடக்கும் நிகழ்வுகள் வெளியே தெரியாத அளவுக்கு மிகுந்த பாதிப்படைந்துள்ளது.செங்கன்னூர் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நகராட்சியாகும். ஆலப்புழை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.கொல்லம் மற்றும் கோட்டயத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 220 செங்கன்னூர் வழியே செல்கிறது. பந்தளம், பத்தினம்திட்டா, மாவேலிக்கரா, திருவல்லா ஆகியவை இதன் அருகிலுள்ள நகரங்களாகும்.சில மணி நேரத்திற்கு வெளியான  முன்னர் செங்கன்னூர் தொகுதி எம்.எல்.ஏ சஜி செறியானின் கண்ணீர் வேண்டுகோள் நிலைகுலைய வைக்கிறது.வீடுகளிலிருந்து 50 க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், செங்கன்னூரில் 10000 பேருக்கு மேல் சிக்கியுள்ளதாகவும் ரிப்போர்ட்டர் சேனலில் கூறியிருக்கிறார்.ஏற்கனவே பலி எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் சென்று விட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் அந்த மாநிலத்தை மேலும் நிலைகுலைய செய்துள்ளது.மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, செங்கன்னூரில் 1.25 இலட்சத்திற்கும் மக்கள் இருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*