கேரள மக்களுக்கு உதவுங்கள்- கண்ணீர் வடிக்கும் பிரபல நடிகர்

கேரள மக்கள் கடும் வெள்ளத்தில் எப்படி இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்ற ஏக்கம் அனைவரிடமும் இருக்கிறது. சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்கள், புகைப்படங்கள் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

இந்த நேரத்தில் நடிகர் நிவின் பாலி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் God’s own country சிதறியிருக்கிறது. நாங்கள் நம்பிக்கையற்று இருக்கிறோம். பலர் வாழ்க்கையை இழந்து, வீடுகளை இழந்து எதிர்கால பயத்துடன் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நாட்டு மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

என் கையில் கூப்பி உலகம் முழுவதும் இருப்பவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்னுடைய மாநிலத்திற்கு உதவுங்கள். கண்டிப்பாக எங்களால் மீண்டு வர முடியும் அந்த நம்பிக்கை இருக்கிறது. இப்போது எங்களுக்கு உங்களிடம் இருந்து உதவிகள் தேவைப்படுகிறது என கண்ணீர் மல்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*