உங்களுக்கு ஏன் அந்த கவலை? ஒரு சீட்டாவது ஜெயிக்க பாருங்க, தமிழிசைக்கு பதிலடி கொடுத்த நந்தா .!

நடிகர் சங்கப் பொதுக்குழுவில் மறைந்த வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தாதது குறித்து தமிழகப் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டிருந்த கண்டனத்துக்கு நடிகர் நந்தா பதிலடி கொடுத்திருக்கிறார்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 19 ந் தேதி நடைபெற்றது. அதில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தபடவில்லை.  இதற்குத் தமிழகப் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் இது குறித்துத் தமிழகப் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “இன்று நடிகர் சங்கச் செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென ந.ச.உறுப்பினரும் பாஜக கலை அணி செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்து இருந்தார்.இன்று நடிகர் சங்க செயற்குழுவில்முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே முன்னாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென ந.ச.உறுப்பினரும் பாஜககலைஅணிசெயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 19 August 2018இதற்குப் பதிலடியாக நடிகர் நந்தா,  “நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு கவலை? பஞ்சாயத்து தேர்தலில் ஒரு சீட் வெல்ல முயற்சி செய்யுங்கள். தமிழக மக்களுக்கும், எங்கள் சங்கத்து உறுப்பினர்களுக்கும் உதவி செய்வதில் தான் எங்களுக்கு யோசனை. இந்த அழுக்கு அரசியலை நிறுத்துங்கள். திருமதி தமிழிசை அவர்களே. உயர்ந்த தலைவர் மறைந்த திரு வாஜ்பாய் அவர்கள் மீது எங்களுக்கு அதிக மரியாதை உள்ளது. மொத்த நிகழ்ச்சியையும் நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். சத்யன் என்ற யாரும் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*