என்னை அடித்துவிட்டான், இனி சும்மா விட மாட்டேன்- பிக்பாஸ் வீட்டில் என்ன இப்படி அடிச்சுக்றாங்க

பிக்பாஸ் வீட்டில் புதிதாக யாராவது வருவார்கள் என்று பார்த்தால் ரசிகர்களின் ஆசை நடப்பதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக பிக்பாஸ் போட்டியாளர்களே வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் பார்த்து வெளியே ஓடிவிடுவார்கள் போல் தெரிகிறது. இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்திருப்பதாக தெரிகிறது. வழக்கம் போல் மஹத் ஒரு நிதானம் இல்லாமல் விளையாடுகிறார், அதிலும் மற்றவர்களை அடிக்கிறார். இதனால் டேனியல் பாலாஜி கடும் கோபத்தில் அவன் என்னை அடித்துவிட்டான், இனி சும்மா இருக்க மாட்டேன் பிக்பாஸ் என்று கூறுகிறார். இவர்களின் சண்டை பிரச்சனை முடியுமா இல்லை பெரிதாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று. . #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #VivoBiggBoss @Vivo_India

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*