இந்திய தாயின் சிறந்த மகன் வாஜ்பாய்க்கு டி.டி.வி.தினகரன் இரங்கல்! 

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நல குறைவு ஏற்பட்டு, கடந்த 9 வாரங்களாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல்நலம் மோசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த மருத்துவ அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று) வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும், உயிர் காக்கும் மருத்துவ உபகாரணங்களுடன் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி மாலை 5.05 மணிக்கு உயிர் இழந்ததாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இந்த செய்தி அரசியலுக்கும் அப்பாற்பட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய தாயின் சிறந்த மகன் பிரதமர் வாஜ்பாய் இரங்கல் தெரிவித்துள்ளார் அ.ம.மு.க டி.டி.வி.தினகரன். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*