கேரளாவில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க, அதிரடியாக களமிறங்கிய கூகுள் நிறுவனம்..!!

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  வரலாறு காணாத மழையால் கடவுளின் தேசம் என்ற அழைக்கப்படும் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   கனமழையால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50,000 குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  பலர் காணாமல் போய்விட்டனர்.  இந்நிலையில், கேரள வெள்ளத்தின் காரணமாக  காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக கூகுள் புதிய பயன்பாட்டை (அப்ளிகேஷன்) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பயன்பாட்டை கணினி மற்றும் செல்லிடப்பேசியிலும் பயன்படுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கு, https://google.org/personfinder/2018-kerala-flooding என்ற இணையதள முகவரிக்கு சென்று அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.   

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*