கேரள மக்களுக்கு, நிவாரண பொருட்களை லாரியில் அனுப்பி வைத்த பிரபல கவர்ச்சி நடிகை..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் அரிசி மற்றும் பருப்பு வகைகளை நிவாரண பொருளாக வழங்கியுள்ளார்.கேரளாவில் பெய்த கனமழையில் எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் முற்றிலும் சேதமடைந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு தற்போது மழை நின்று விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளார். 1,100 கிலோ அரிசி, பருப்பு போன்றவற்றை லாரியில் அனுப்பி வைத்து உள்ளார்.முன்னதாக, நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சமும், விஜய்சேதுபதி 25 லட்சமும், தனுஷ் ரூ. 15 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். மேலும், பாலிவுட் பிரபலங்கள் பலர் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *