ஓடும் ரெயிலில் தாக்கப்பட்ட கேரள வாலிபர்..! மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி..! 

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவருடைய மகன் கவுதம் (22). இவர் பாண்டிச்சேரியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வாரங்களாக கேரளாவில் கன மழை பெய்ததால் தனது குடும்பத்தினர் நிலை பற்றி தெரியாமல் மிகவும் வருத்தத்துடன் இருந்தார்.தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் போக்குவரத்து சீரானதை தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில் மூலம் கேரளாவிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, ரெயிலில் அவருடன் பயணித்த ஒரு தரப்பினருக்கும், கவுதமுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் உண்டானது. இதனால் கவுதமை அந்த கும்பல் கடுமையாக தாக்கி உள்ளனர். திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தபோது கவுதம் தனது உடமைகளுடன் ரெயிலில் கீழே இறங்கினார். பின்னர் அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார். ரத்த காயத்துடன் கிடந்த அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரெயில்வே ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கவுதமை தாக்கிய கும்பல் யார்? வழிப்பறி சம்பவத்தில் தாக்கினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*