சென்றமுறை இந்தியர்களின் வங்கி கணக்கில் 15 இலட்சம்.! இந்த முறை மோடியின் திட்டம் என்ன தெரியுமா.?!!

கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் மோடி, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.பின்னர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற பின். பிஜேபி கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் அனைவரும், பிரதமர் மோடி அவர்கள் இந்தியர்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் வங்கி கணக்கிலும் 15 லட்சம் தருவதாக கூறவில்லை என்றும், மாறாக இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு வருவதாக மட்டுமே கூறியதாக தெரிவித்தனர்.ஆனாலும் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடையில் அவர் கூறிய வார்த்தைகள் காணொளிகளாக இன்றளவும் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றது.இந்நிலையில், குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, ”பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், 75 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடும் இந்த வேளையில் 2022 ஆம் ஆண்டு சொந்த வீடு இல்லாத அனைத்து குடும்பத்திற்கும் வீடு கட்டித்தரப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*