ஆவணி மாத ராசிபலன்கள்! குரு உச்சத்தில் இருக்கும் ராசி!!

மேஷம் :

விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவை தரும். திருமண பேச்சுவார்த்தைகளில் காலதாமதம் உண்டாகி பின்பு சுபிட்சம் உண்டாகும். குறுகிய தூர பயணத்தால் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தரர்களின் திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் அமையும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் அலைச்சல் உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களினால் சாதகமான சூழல் உண்டாகும்.

வழிபாடு :

பார்வதிதேவியை வழிபட்டு வரவும்.

ரிஷபம் :

தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இளைய உடன்பிறப்புகளால் எண்ணிய பலன் உண்டாகும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் நட்பால் சாதகமான வாய்ப்புகள் அமையும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய வழிகாட்டல்கள் கிடைக்கும். உறவினர்களுடன் ஏற்படும் பயணங்களால் இலாபகரமான செய்திகள் வந்தடையும்.

வழிபாடு :

தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

மிதுனம் :

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் மற்றும் சாதகமான இடமாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகளால் சில மன வருத்தங்கள் உண்டாகும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். பயணங்களால் இலாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அனைவரிடத்திலும் மரியாதை உயரும். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு சுமூகமாக முடிப்பீர்கள்.

வழிபாடு :

நரசிம்மரை வழிபட்டு வரவும்.

கடகம் :

செய்யும் தொழிலில் மரியாதை அதிகரிக்கும். ஆகாய மார்க்கமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய இலாபம் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் மற்றும் வழிகாட்டல்கள் கிடைக்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். அலைச்சல்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புதிய எண்ணங்களுக்கு செயல் திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உறவுகள் பற்றி புரிதல் உண்டாகும். தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கைக்கான செயல் திட்டம் வகுப்பீர்கள். நண்பர்கள் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.

வழிபாடு :

விநாயகரை வழிபட்டு வரவும்.

சிம்மம் :

உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளுவினால் மேன்மையான சூழல் உண்டாகும். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும். தொழிலில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். மனதில் எழும் தேவையற்ற எண்ணங்களால் மன வருத்தம் உண்டாகும். புதிய வாகனச் சேர்க்கை ஏற்படும். தாய் வழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான நிலை உண்டாகி பின்பு நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

வழிபாடு :

நவகிரகத்தில் உள்ள சுக்கிர பகவானை வழிபட்டு வரவும்.

கன்னி :

வெளியூர் பிரயாணங்களால் இலாபம் அதிகரிக்கும். சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்போர்களிடம் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். புதிய கலைகளில் ஆர்வம் ஏற்படும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் உண்டாகும். அரசு அதிகாரிகள் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் இலாபம் அடைவீர்கள். பிள்ளைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். அயல்நாட்டு தொழில் வாய்ப்புகளால் சேமிப்பு உயரும். மனைவி மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும்.

வழிபாடு :

நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானை வழிபட்டு வரவும்.

துலாம் :

ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். திருமண வரன்கள் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அடைவீர்கள். வெளி வட்டாரங்களில் மரியாதை உயரும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். வாக்குவாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். தாயிடம் தேவையில்லாத வாதங்களை தவிர்க்கவும். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள்.

வழிபாடு :

கந்தனை வழிபட்டு வரவும்.

விருச்சகம் :

உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த சாதகமான உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு அமைவதற்கான சூழல் அமையும். கடிதம் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களின் உதவியால் சுப செய்திகள் வரும். புதிய தொழில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும்.

வழிபாடு :

மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தனுசு :

உயர் அதிகாரிகளின் ஆதரவு ஏற்படும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். தர்க்க விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். கணவன்-மனைவி உறவு மேம்படும். நிர்வாகத்திறமை புலப்படும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் காலதாமதமாகி பின்பு கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் யோகத்தால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எண்ணிய முயற்சிகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உங்களின் திறமை வெளிப்படுவதற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்கள் மூலம் சில தடைகள் ஏற்பட்டாலும் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

வழிபாடு :

துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.

மகரம் :

கணவன் – மனைவியே இடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்னோன்யம் அதிகரிக்கும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்திகள் உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உறவுகளில் மாற்றமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலையில் அனுசரித்து செல்லவும். இணையதள வேலைவாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்களும் அதை நடைமுறைபடுத்துவதில் இருந்து வந்த சிக்கலும் குறையும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் குழப்பமின்றி செயல்படவும். பணிபுரியும் இடங்களில் கோபத்துடன் செயல்படாமல் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடக்கவும்.

வழிபாடு :

ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

கும்பம் :

தாய் வழி உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்பாராத சுப செய்திகள் உண்டாகும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அமைதியுடன் செயல்படவும். வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். வேள்விகளில் கலந்துக்கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் தனவரவு மந்தமாக இருக்கும். மனை சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படும். போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் இலாபம் அடைவீர்கள். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றி முடிவுகள் எடுப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

வழிபாடு :

பெருமாளை வழிபட்டு வரவும்.

மீனம் :

மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். பணியில் ஆதரவான சூழலும், சில மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான யுக்திகளை கையாள்வீர்கள். தலைமை அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். உடன்பிறப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய கடன் உதவிகள் கிடைக்கும். எதிலும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படவும்.

வழிபாடு :

சிவபெருமானை வழிபட்டு வரவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*