தமிழர்களுக்கும், தமிழக அரசுக்கும் பேரதிர்ச்சி.!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!! உயிர் தியாகம் வீணானதா.?!

கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்படவே, போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.  தமிழக அரசின் இத்தகைய உத்தரவை எதித்து வேதாந்தா குழுமம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,  ஆலையின் நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது தீர்ப்பளித்தது. ஆனால், ஆலைய இயக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி தரவில்லை. இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதிக்கு எதிராகவும், இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை செய்ய தடைவிதிக்க கோரியம் சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்நிலையில், இந்த வழக்கை சற்றுமுன் விசாரணை செய்த நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ”ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. மேலும், ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கினை, முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கவும், வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பதை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இறுதியாக, தமிழக அரசு தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*