டி.டி.வி. தினகரன் பேச்சால் உற்சாகம் அடைந்த பல்லாயிர கணக்கான தொண்டர்கள்!

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அம்மா மககள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். அங்கு நடந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அ.ம.மு.க கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தாங்கள் எந்தவொரு கூட்டம் நடத்தவும் ஆளும் கட்சியினர் அனுமதி தருவதற்கு மறுக்கிறார்கள். மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் அமமுக அபாரமாக வெற்றி பெறும் என்றும் டி.டி.வி.தினகரன்கூட்டத்தில் பேசினார்.

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “எனது சிறிய எதிரி அ.ம.மு.க” என்று கூறுகிறார். தற்போதைய முதல்வர் தலைமையில் இருக்கும் அமைச்சர்கள்  காமெடி செய்து கொண்டு இருக்கின்றனர். இதுபோன்ற அமைச்சர்களை வைத்துக் கொண்டு தங்களது கட்சி பெரிய கட்சி என்கிறார் தற்போதைய முதல்வர்.

அ.ம.மு.க கட்சியை குட்டி எதிரி என்றால் எங்களுக்கு கூட்டம் நடத்தக்கூட அனுமதி தராதது ஏன் என்றும், எங்களுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து பயந்துதான் அனுமதி தர மறுக்கிறீர்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குழந்தை மண்டியிட்டு வருவது போல் வந்து அம்மையார் சசிகலா காலில் விழுந்து வணங்கினார் எடப்பாடி பழனிசாமி இதுவும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என  டி.டி.வி. தினகரன்.

மேலும் பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சியவர் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அனால் இன்று என்னை குட்டி எதிரி என்று கூறுகிறார். வரும் தேர்தலில் தெரியும் அவர்களுக்கு உண்மையான தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று. இவ்வாறு பேசி முடித்தபிறகு ஏராளமான தொண்டர்கள் கர ஓசையை தட்டி எழுப்பினர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*