முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் காலமானார்.

முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் சிறுநீரக தொற்று மற்றும் முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் கடந்த சில நாட்களாக வாஜ்பாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று இரவு அறிக்கை வெளியிட்டது .இதையடுத்து உடல்நிலை குறித்து விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் பல்வேறு தேசிய தலைவர்கள் நேரில் சென்றனர் .

இந்நிலையில்  இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் கொண்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வாஜ்பாய் இறந்துவிட்டதாக திரிபுரா ஆளுநர் டிராய் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

#BreakingNews முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் காலமானார்.

* டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் உயிர் பிரிந்தது.
#Vajpayee | #RIPVajpayee

வாஜ்பாயின் வாழ்க்கை…

குவாலியரில் 1924-ம் ஆண்டு டிச. 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார்.

* இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் வாஜ்பாய்.

* காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற முறையில் வாஜ்பாய் மட்டுமே 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தவர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*