விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது..! அதிகாரபூர்வ தகவல் வெளியானது..!!

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து “விஸ்வாசம் ” படத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் “விஸ்வாசம் ” படத்தில் கைகோர்த்துள்ளார்.   இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. நடிகர்அஜித்தும், சிவாவும் தீவிரமான சாய்பாபா பக்தர்கள் என்பதால், சாய்பாபாவுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.#ViswasamFirstLook to unveil tomorrow 3:40am by @SathyaJyothi_ Massy Thala on the way!! Praise God!— D.IMMAN (@immancomposer) August 22, 2018 இந்நிலையில், அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாலை  3:40 மணியளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய சிவா படங்களின் முக்கிய அறிவிப்புகளையும் அவர் வியாழக்கிழமையே வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*