பவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.

பவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.இந்த நீர் முழுமையும் ஆற்றில் திறந்து விடாமல், LBB முறை 1 மற்றும் 2 இரண்டையும் திறந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என இன்று காலையில் இருந்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.கீழ் பவானி திட்ட கால்வாய் என்பது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 125 மைல் நீளமுடைய பாசன வாய்க்காலாகும். இதனால் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.முதன்மை கால்வாய் அதிகபட்சமாக 2300 கன அடி நீரை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை கால்வாயிலிருந்து நீரை வயல்களுக்கு கொண்டு செல்லும் வாய்க்கால்களின் மதகு கன அடிக்கு 60 ஏக்கர் பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாய் ஆண்டுக்கு இரு முறை நீர் பெறுகிறது. பொதுவாக ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரை ஒரு முறையும் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை மற்றொரு முறையும் நீர் பெறுகிறது. அணையின் நீர் இருப்பை கணக்கில் கொண்டு நீர் திறக்கப்படும் தேதி மாற்றத்துக்குள்ளாகும்.கீழ் பவானி கால்வாயில் கான்கரிட் தளம் அமைப்பதற்கு விவசாசிகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் விநியோகிக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் எதிர்காலத்தில் கான்கிரீட் கால்வாய் அமைத்தால் மட்டுமே கடைமடைக்கும் நீர் விரைவாக சென்றடையும் என்பதால் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கீழ்பவானி முறைநீர் பாசன சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது இதனை நினைவு படுத்தும் வகையிலும், பவானி ஆற்று நீர் முழுவதும் காவிரியில் சென்று கலப்பதை தடுக்கும் நோக்கிலும் ஒரு தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது.அதில், மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியாளர் அவர்களே.. பவானி ஆற்று நீரை காவேரி கலக்க விடாமல்.. LBB முறை 1 மற்றும் 2 இரண்டையும் திறந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.. நமது மாவட்டத்தில் 90% குளம் நீரின்றி கிடக்கிறது.. நிலத்தடிநீர் முழுவதும் வற்றி வாடிக்கொண்டு இருக்கிறோம்.தயவு கூர்ந்து ஈரோடு மாவட்ட குடிநீர் தண்ணீர் பிரச்சினை  தீர்க்க முயற்சி செய்யுங்கள்’ என்று அதில் கூறியுள்ளனர்.இதில் முதன்மை கால்வாய் ஒன்று மட்டுமே 2300 கன அடி நீரை கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*