ஜெயலலிதாவாக நடிக்கப்போவது இவரா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படமாகின்றது என்ற செய்தி நேற்று வெளிவந்தது. இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Vibri Media தயாரிக்கவுள்ள இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளனர். இதே நிறுவனம் தான் என். டி. ஆர் வாழ்க்கையையும் படமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது, மேலும், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது. தற்போது இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை வித்யா பாலனிடம் நடந்து வருவதாக தெரிகின்றது, வித்யாபாலனை ஜெயலலிதாவாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? பார்ப்போம்.

ஜெயலலிதாவாக நடிக்க தகுதியான நபர் யார் என்ற கருத்துகணிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும் https://kollywood7.com/poll/?poll_id=146

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*