“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்!

“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்!
சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம் என தற்போது 4வது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதில், மாஸ் பாடல் வரிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.

அஜித் – சிவா கூட்டணியின் இந்த விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வைரல் ஆனது மேலும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, இந்த நிலையில் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

படுவேகமாக நடந்து வரும் விசுவாசத்தின் படப்பிடிப்புகளுடன் படத்தின் வியாபாரமும் சூடு பிடித்து வருகிறது, ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு மாஸ் தகவல் வந்துள்ளது.விசுவாசத்தின் பாடல் வரி ஒன்றை பாடலாசிரியர் அருண் பாரதி வெளியிட்டுள்ளார்.

“எத்தன உயரம் இமயமல – அதில்

இன்னொரு சிகரம் எங்கதல”

இந்தப் பாடல் வரியை பார்த்த அஜித் ரசிகர்கள் செம மாஸ் வரிகள் என ரசித்து ஷேர் செய்து வருகிறார்கள், இனி எத்தனை பேரின் whatsapp டிபிகளில் இந்தப் பாடல் வரி இருக்கிறது என்று பொறுத்துப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*