திடீர் திருப்பம்., கள்ளகாதலா.? பியூட்டி பார்லர் விவகாரத்தில் சிக்கிய மேலும் ஒரு திமுக நிர்வாகி.!!

பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் சத்யா என்பவர் பல ஆண்டுகளாக பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அந்த அழகு நிலையத்தில் நுழைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், சரமாரியாக சத்யாவை தாக்குகிறார். மேலும், அவரின் கழுத்தை பிடித்து கீழே தள்ளி தனது கால்களால் உதைக்க வலி தாங்கமுடியாத சத்யா கத்துகிறார். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் ஈவு இரக்கமின்றி சரமாரியாக திமுக கவுன்சிலர் செல்வகுமார் தனது காலால் சந்தியாவின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்கும் காணொளி தற்போது கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரம்பலூர் பாரதிதாசன் நகர் நகரில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவருக்கு வயது 35. இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர் செல்வக்குமார் (வயது 52) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.கவுன்சிலர் செல்வகுமார், சத்யாவின் பியூட்டி பார்லர் அருகே பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கொடுக்கல்-வாங்கலில் இவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளது பின் அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இந்த நிலையில் சத்யா பெரம்பலூர் மாவட்டத்தின் தற்போதைய திமுக நகர செயலாளர் பிரபாகரன் என்பவருடன் நட்பு ஏற்பட்டு அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.இந்த விவகாரம் கவுன்சிலர் செல்வகுமாருக்கு தெரிய வரவே, அவர் சத்யாவை கூட்டு கண்டித்துள்ளார். மேலும், இதனை சத்யா கேட்க மறுக்கவே சத்யாவை பியூட்டி பார்லர் உள்ளே சென்று கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். ஆனால் இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை.இதனை அடுத்து ஆத்திரமுற்ற சத்யாவுடன் தற்போது தொடர்பில் இருக்கும் திமுக பிரமுகர் பிரபாகரன், இந்த வீடியோவை வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளமான முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், இந்த விடயம் செய்தி ஊடகங்களிலும் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திமுகவின் தலைமை செல்வகுமாரை தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளது.கடந்த மாதம் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி உடல்நிலை நோயுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தபோது திமுக நிர்வாகி ஒருவர் பிரியாணி கடையில் புகுந்து, பிரியாணி தரவில்லை என்று பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கடுத்து தூத்துக்குடியில் கள்ளத்துப்பாக்கி உபயோகித்ததாக திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். அதற்கடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டு திமுக நிர்வாகிகள், செல் கடையின் உரிமையாளர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் ஒரு பியூட்டி பார்லர் கடையின் உள்நுழைந்து அந்த பாலன் உரிமையாளரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் இது போன்ற அராஜக போக்குடன் நடந்து வருவதை தடுக்க, திமுக கட்சியில் ஒரு கட்டமைப்பை கொண்டு வர அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*