ஜாமீன் கிடைக்குமா கருணாஸிற்கு, இன்று விசாரணை!

கடந்த 16ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் தனது காக்கிச் சட்டையை கழற்றி விட்டு நேருக்கு நேர் மோதி பார்க்க வருமாறு சவால் விடுத்தார்.

மேலும் முதலமைச்சர் பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இழிவாகவும் பேசினார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கருணாஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில் கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையில், இன்று காலை 10 மணிக்கு கருணாஸை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு ஆஜர்படுத்தும் போது, கருணாஸின் ஜாமீன் மனு மீதும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

Chennai Egmore court investigates bail petition for MLA Karunas today.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*