இரண்டே இரண்டு மாற்றம்! முன்னணி வீரர்கள் நீக்கம்!

 இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி போராடி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இந்தியா இன்னிங்ஸ் படுதோல்வி அடைந்து அதிர்ச்சியை கொடுத்தது.மூன்றாவது டெஸ்ட் போட்டி  இன்று  சனிக்கிழமை நாட்டிங்காமில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணியின்  வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்த இந்திய் அணி அசத்தல் வெற்றி பெற்றது. ஆனால் நான்காவது போட்டியில் இந்திய அணி மீண்டும் போராடி தோல்வியடைந்தது. இதனால் தொடரை இழந்தது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டிய தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தொடரில் சொதப்பி வரும் இந்திய பேட்ஸ்மேன்களை நீக்ககோரி முன்னாள் வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளர்கள். இதனால் இன்று துவங்கும் இறுதி போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்திய அணியில்  இளம் வீரர் அறிமுக வீரராக ஹனுமா விஹாரி  இடம்பபெற்றுள்ளார். அவர்  ஹர்டிக் பாண்டியாக்கு பதிலாகவும், அஷ்வினுக்கு பதிலாக  ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டிக்கான டாஸிலும் இந்திய கேப்டன் விராட் கோலி தோல்வியடைந்தார். இது குறித்து கேட்டபோது இரண்டுபுறமும் தலை இருந்தால் மட்டுமே நான் டாசில் வெற்றி பெறுவேன் போல என்று சிரித்து கொண்டே கூறினார். இதனால் மைதானமே சிரிப்பலையில் மூழ்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துள்ளது.  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*