ஆண்மை பரிசோதனைக்கு டிமிக்கி கொடுத்த நித்தியானந்தா!

தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன. இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம். இவரின் தந்தை ஒரு கூலி தொழிலாளி.கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், பிடதியில் அமைந்துள்ள நித்யானந்தா தியான பீடத்தில் ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அதன் பீடாதிபதி நித்யானந்தர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடகாவில் நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். அவர் மீது பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்தது, ஆசிரம பக்தை கொலை வழக்கு, போதை பொருட்கள் சேமிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகள்  நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்த போது, நித்தியானந்தா சோதனைக்கு மறுத்துள்ளார்.இதனையடுத்து 2017ல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார் நித்தியானந்தா.

அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. நேற்று வியாழக்கிழமை ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை இருந்தது.அனால் ஆன்மை பரிசோதனைக்கு ஆஜராக மறுத்ததால் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் போடப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது செய்ய பொலிசார் தேடி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*