திமுகவில் குடும்ப அரசியல் உள்ளதை துரைமுருகன் போன்றவர்களே சூசகமாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த ஜூலை மதம் 7 ஆம் தேதி, உடல்நல குறைவால் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் அண்ணா நினைவகம் அருகே கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து, அந்த பதவி காலியானது. கடந்த சில நாட்களுக்கு முன், முக ஸ்டாலின் திமுக தலைவராகவும், முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளராக பொறுப்பேற்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,  திமுக குடும்ப கட்சி என்று விமர்சித்துள்ளார். திமுகவில் குடும்ப அரசியல் உள்ளதை துரைமுருகன் போன்றவர்களே சூசகமாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*