1 டாலருக்கு நிகரான மதிப்பு 72.33 ரூபாய் ஆகியுள்ளது

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான மதிப்பு 72.33 ரூபாய் ஆகியுள்ளது.
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இரண்டு வாரம் முன் நாட்களுக்கு முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.
தற்போது தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும்.70 ரூபாயை தாண்டியதுகடந்த வாரம் இந்திய ரூபாய் மதிப்பு மோசமான நிலையை அடைந்தது. தொடர்ந்து 70 ரூபாயிலேயே நீடித்து வந்தது. அதன்பின் கடந்த 5ம் தேதி 72 ரூபாய் ஆனது. அதற்கு மறுநாள் 72.10 ரூபாயை தாண்டியது. அன்றுதான் முதல்முறை 72 ரூபாயை தாண்டியது இந்திய ரூபாய் மதிப்பு.கொஞ்சமாக முன்னேற்றம் கண்டத்துஅதன்பின் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. 10 பைசா வரை முன்னேற்றம் அடைந்தது. தற்போது மேலும் 33 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.33 ரூபாய் ஆகியுள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.மிக மோசம்ஒரே இரவில் 33 காசுகள் சரிந்துள்ளது. இந்திய வரலாற்றில் இது மோசமான மதிப்பாகும். இதற்கு முன் இவ்வளவு மோசமான நிலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டது இல்லை. மிகவும் ஏழ்மையான நாடுகள் மட்டுமே இந்த பண மதிப்பை கொண்டுள்ளது.100 ரூபாய்இது விரைவில் 100 ரூபாயை அடையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்பிஐ அதற்கு வாய்ப்பளிக்காது. உடனடியாக தலையிட்டு, தனது டாலர் கையிருப்பு மூலம், பண மதிப்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு ஆர்பிஐயை இதில் தலையிட அனுமதிக்குமா என்று தெரியவில்லை .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*