நாளை தமிழகம் முடங்குகிறது.! ஒரு இலட்சம் போலீசார் குவிப்பு.!! பேருந்து, ஆட்டோ ஓடாது.!! வெளியான அறிவிப்பு.!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு உயர்ந்து கொண்டேவருகிறது. ஆனால் நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கூட குறைவான விலையில் எரிபொருள் விற்பனையாகிறது. ஏன் கடந்த வாரம் ஆர்.டி.ஐ., மூலம் வெளியான தகவலில், 15 நாடுகளுக்கு இந்தியா வெறும் 34 ரூபாயில் பெட்ரோலும், 29 ரூபாயுக்கு டீசலும் ஏற்றுமதி செய்கிறதாம்.நமக்கு தான் மத்திய, மாநில அரசுகள் வரி விதித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 83 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலை ரூ.83.54 ஆக விற்பனையாகிறது. டீசல் விலையும் ரூ.76.64  ஆகவும் விற்பனையாகிறது.இந்த 1 லிட்டர் பெட்ரோலுக்கு 40 ரூபாய்க்கு மேல் வரி போடும் மத்திய, மாநில அரசுகளை, வரியை குறைக்க அனைத்து கட்சிகளும் கடுமையான முறையில் வலியுறுத்த வேண்டும். அப்படி இல்லையேல் பெட்ரோல் 1 லிட்டரின் விலை நாளை 120 ரூபாய்க்கும் மேல் விலை உயரலாம்.இதன் காரணமாக அத்தியாசியா பொருள்களின் விலை பலமடங்கு உயரும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதில் எல்லளவு சந்தேகமில்லை. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்தகோரி காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பந்த் அறிவித்தது. நாளை (செப்.,10 ஆம் தேதி) நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார்இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் திமுக, பாமக உள்ளிட்ட 16 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் வணிக சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்காது என தமிழ்நாடு ஆட்டோ சங்கம் அறிவித்துள்ளது.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பாரத் பந்த் போராட்டத்திற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்று அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் நாளை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.நாளை நடக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்து உள்ள காரணத்தினால் மாநிலம் முழுவதும்  அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும். மேலும் தமிழக போக்குவரத்து கழக கூட்டமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நாளைய தினம் 70 சதவீதம் அரசு பேருந்துகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்பதால் ஆட்டோக்களும் நாளை ஓடாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க 1 இலட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த முழு அடைப்பு குறித்து புதுச்சேரி மாநில முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், நாளை தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார். நாளை அம்மாநிலத்தில் முழு அடைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் முழு அடைப்பு போராட்டம் மாலை 3 மணி வரை நடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளதால் நாடு முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*