என்னை முடிந்தால் தடுத்து பாருங்கள்; ஹைகோர்ட்டாவது மயிராவது: ஹெச்.ராஜா-வீடியோ

சென்னை: என்னை முடிந்தால் தடுத்து பாருங்கள்; ஹைகோர்ட்டாவது மயிராவது என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த 13-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, விநாயகரை ஊர்வலமாக தூக்கிச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கலந்து கொண்டார்.

அரசு அனுமதித்த பாதையை விட்டு விட்டு வேறு ஒரு பாதையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக ஹெச். ராஜா தலைமையிலான குழுவினர் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

எனவே, குறிப்பிட்ட அந்த வழியில் விநாயகர் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை சுட்டிக் காட்டி போலீசார் அவரை தடுத்துள்ளனர். என்னை முடிந்தால் தடுத்து பாருங்கள்; ஹைகோர்ட்டாவது மயிராவது- பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா போலீசாருடன் வாக்குவாதம்

#HRaja #HighCourt #BJP #GaneshChaturthi2018 #GaneshChaturthi #GanpatiBappaMorya #VinayagarChathurthi #AIADMK #DMK #Court pic. twitter. com/Zt8e3o7Vtk— toptamilnews (@toptamilnews) September 15, 2018இதனால் ஆத்திரமடைந்த ஹெச். ராஜா, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், போலீசார் அனைவரும் ஊழல் பேர் வழிகள் என குறிப்பிடும் ராஜா, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் தரும் லஞ்சத்தை நான் கொடுக்குறேன். நீங்கள் எல்லாம் ஹிந்துவா. . ஹிந்துக்களை ஏன் டார்ச்சர் செய்கிறீர்கள் என மத வெறியை தோண்டும் வகையில் பேசுகிறார்.

மேலும், போலீசாரை பார்த்து டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்த அன்னைக்கே நீங்கள் எல்லாம் யூனிபாஃர்ம கலட்டி போட்டுட்டு வீட்டுக்கு போயிருக்கனும் உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா என தங்களது பணியை செய்து கொண்டிருக்கும் போலீசாரை பார்த்து கடும் சொற்களால் ஆவேசமாக அந்த வீடியோவில் ஹெச். ராஜா பேசுகிறார்.

உயர் நீதிமன்ற அனுமதி மறுப்பை சுட்டிக் காட்டும் போலீஸ் அதிகாரி ஒருவரை பார்த்து ஒவ்வொரு ஹிந்து வீடு வழியாகவும் நான் செல்வேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள் ஹைகோர்ட்டாவது மயிராவது என உயர் நீதிமன்றத்தை அந்த வீடியோவில் மிகத் தரக்குறைவாக ஹெச். ராஜா பேசியுள்ளார். H Raja Argues with police in vinayagar chathurthi rally

எச் ராஜா எவ்வளவு தைரியமா, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று சொல்லுகிறார்

https://youtu.be/4NMscgybxbA